இல்லம் தேடி கல்வி கலை பயண கலைஞர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் இன்று துவக்கம்

இல்லம் தேடி கல்வி கலை பயண கலைஞர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் இன்று துவக்கம்
X

மாநில அளவிலான இல்லம் தேடி கல்வி கலைப்பயணம் கலைஞர்களுக்கான கலை பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் 

பள்ளிக் கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி கலைபயண கலைஞர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் இன்று துவங்கியது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி கலைபயண கலைஞர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் இன்று துவங்கியது.

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்துவந்த நிலையில் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கி போய் இருந்து வந்தனர். இதனால் மாணவர்களின் கல்வித் தரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. இதனையடுத்து தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் பள்ளிகளுக்கு வருவதற்கு அதிக அளவில் மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.

மாணவர்களிடையே கல்வியை கொண்டு போய் சேர்க்க விதத்திலும் மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி என்ற ஒரு திட்டத்தை துவக்கினார். பள்ளிகளுக்கு தங்களுடைய குழந்தைகளை அனுப்பி வைக்காமல் இருக்கும் கிராமங்களில் கலைக்குழுவினர் மூலம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் தடைபட்ட பள்ளியை மீண்டும் குழந்தைகள் கற்பதற்கு பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற பல்வேறு விதமான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொடர்ந்து இல்லம் தேடி கல்வி கலை நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரம் ஜெஜெ கல்லூரியில் இன்று தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் இல்லம் தேடி கல்வி மாநில அளவிலான கலைஞர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் இன்று துவங்கியது. இந்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தலைமை வைத்தார்.

மாநில அளவிலான இல்லம் தேடி கல்வி கலைப்பயணம் கலைஞர்களுக்கான கலை பயிற்சியினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த பயிற்சி முகாமில் தமிழ் நாடு மாநில கிராம கலைஞர்கள் மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சோமசுந்தரம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் தமிழக நாட்டுப்புற அனைத்து ஒருங்கிணைந்த சங்கம் தஞ்சாவூர் மாநிலத் தலைவர் கலைமணி சின்னபொண்ணு குமார் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு துவக்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, இந்த இல்லம் தேடி கல்வி திட்டம் மாணவர்களிடத்தில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் மீண்டும் அரசு பள்ளிகளுக்கே மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றார்கள். ஆனாலும் நிறைய மாணவர்கள் பள்ளிகளுக்கு வராத சூழ்நிலை இருந்து வருகிறது.

அந்த நிலையை மாற்றி மீண்டும் அரசு பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று நடை பயிற்சி முகாம் மிகப்பெரும் பயனுள்ளதாக இருக்கும் எந்த ஒரு நிகழ்வையும் பொது மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு நாட்டுப்புற கலை மூலம் எடுத்துச் சென்றால் அது மக்களிடம் சுலபமாக சென்றடையும். எனவே தான் தமிழக அரசு அறிவித்துள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் நாட்டுப்புற கலைகள் மூலம் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் பயிற்சி முகாமில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பேசினார். முன்னதாக ஆட்சியர் கவிதா ராமு நிகழ்ச்சியில் பங்குபெற வருகை தந்தபோது மேளதாள நாதசுரம் கலை நிகழ்ச்சிகள் மூலம் ஆட்சியர் கவிதா ராமுவை நிகழ்ச்சிக்கு வரவேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!