பொங்கலை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் 23 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 18 ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியானது பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 13 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் தூரமும், சிறிய மாட்டு போய் வர 6 மைல் தூரமும் போட்டி தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் பெரிய மாடு பிரிவில் ஒடுத்திக்காடு பெரியகருப்பன் முதல் பரிசையும், திருப்பந்துருத்தி ஆனந்த அய்யனார், கடியாபட்டி பவதாரணி, கே.புதுப்பட்டி கேஏ அம்பாள் முறையே 2,3, 4 ம் பரிசுகளை வென்றனர். தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பந்தயத்தில் சிவகங்கை மாவட்டம் வெளிமுத்தி வாகினி, 2ம் பரிசு தஞ்சை அம்மாபேட்டை ராஜேஸ்வரி, 3ம் பரிசு கரையப்பட்டி துரைராஜ், 4ம் பரிசு சாக்கோட்டை கோதையம்மாள் மரமில் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.பந்தயம் நடைபெற்ற திருமயம்-ராயவரம் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டிருந்து பந்தயத்தில் கலந்து கொண்ட மாடுகளை உற்சாகப்படுத்தினர்.

Tags

Next Story
ai powered agriculture