சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
திருமயம் அருகே பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, அரிமளம், முனசந்தை , கல்லுக்குடியிருப்பு, புதுநிலைபட்டி, ஆகிய கிராமங்களுக்கு சென்ற மருத்துவர் ஸ்ரீநிதி அங்குள்ள பெண்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கூடியிருந்த பெண்களிடம் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டீர்களா என கேட்டறிந்த பின்னர் அங்கு கூடி இருந்த பெண்களிடம் அனைவரும் கொரோனா் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து பெருங்குடி கிராமத்தில் நடைபெற்ற தடுப்பு ஊசி போடும் முகாமை பார்வையிட்டு மருத்துவர்களிடம் தடுப்பூசி பற்றி கேட்டறிந்த பின்னர் முனசந்தை கிராமத்தில் கால்நடை மருந்தகம் அமைக்க பெண்கள் கோரிக்கை விடுத்தனர் பொதுமக்கள் மனு அளித்தால் உரிய நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர் மூலம் எடுக்கப்படும் என தெரிவித்தார் . அதன் பின்னர் மகளிர் சுய உதவி குழுக்களை சந்தித்த மருத்துவர் ஸ்ரீநிதி பெண்கள் கொரோனா காலத்தில் விழிப்புணர்வுடனும் பாதுகாப்புவுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராமசுப்புராம், வடக்கு வட்டார தலைவர் அர்ஜுனன், தெற்கு வட்டார தலைவர் வீரப்பன், பொதுக்குழு உறுப்பினர் முகமது இப்ராஹிம், ஒன்றிய கவுன்சிலர் மெய்யப்பன், பாக்கியலட்சுமி பெருங்குடி ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன் மாவட்ட துணைத் தலைவர் செல்லையா மற்றும் வட்டார நகர பொறுப்பாளர்கள் மகளிர் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu