ஜல்லிக்கட்டு போட்டி- விசிலடித்து ரசித்த மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூர் புனித அடைக்கல மாதா ஆலய அர்ச்சிப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகளை வீரர்கள் உற்சாகமாக அடக்கினர். இந்த போட்டியை விசிலடித்து மாணவிகள் ரசித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கீழப்பனையூர் தெற்கு குடியிருப்பில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலய அர்ச்சிப்பு விழாவை முன்னிட்டு அங்கு உள்ள திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி இன்று காலை 11மணிக்கு தொடங்கி நடைபெற்றது. போட்டியை திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரகுபதி தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். போட்டியில் 11 காளைகள் மற்றும் 99 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கின.பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடியது பார்வையாளர்களை கவர்ந்தது.

மேலும் வடமாடு மஞ்சுவிரட்டில் சிறந்த முறையில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அவர்களின் பிடியில் சிக்காமல் விளையாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் போட்டி அமைப்பாளர்கள் சார்பில் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை விசிலடித்து ரசித்த மாணவிகள் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers