கோயில் திருவிழாவில் அன்னதானத்தை தொடக்கி வைத்தார் புதுக்கோட்டை ஏடிஎஸ்பி

கோயில் திருவிழாவில்  அன்னதானத்தை தொடக்கி வைத்தார் புதுக்கோட்டை ஏடிஎஸ்பி
X

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள கோட்டையம்மன் வீர ஆஞ்சநேயர் கோவில் திருவிழாவை  முன்னிட்டு     நடைபெற்ற அன்னதானத்தை   துவக்கி வைத்தார் ஏடிஎஸ்பி   இராஜேந்திரன்.

கோட்டை காளியம்மன் வீரஆஞ்சநேயர் கோயிலில் ஐந்தாம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது

கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை ஏடிஎஸ்பி. இராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்கழி மாதத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதே போல், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை காளியம்மன் வீரஆஞ்சநேயர் கோயிலில் ஐந்தாம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து, ஐந்தாம் ஆண்டு திருவிழாவையொட்டி நடைபெற்ற, அன்னதானத்தை ஏடிஎஸ்பி ராஜேந்திரன், திமுக நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை கலியமூர்த்தி மற்றும் கேஜிபி,திமுக நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
மக்களின் உயர்தர மருத்துவ சேவைக்கான முன்முயற்சி - நாமக்கல் ஆட்சியரின் முக்கிய அறிவுறுத்தல்