புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா
X

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மிக்க பொருட்களை வழங்கிய நிர்வாகிகள்

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு மகளிர், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தெற்கு 4ம்வீதியிலுள்ள மா மலர் மருத்துவமனை வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக, மருத்துவர் தில்லை மலர் கலந்து கொண்டு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களிடம் தாய்ப்பால் குறித்தும் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது குறித்தும் பெண்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

பின்னர் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க சத்துள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் மாரிமுத்து தலைமை வகித்தார். சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் தங்கராஜ், சங்கத்தின் பொருளாளர் செந்தில்வேல் மற்றும் ரோட்டரி சங்கம் முன்னாள் நிர்வாகி நைனா முகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!