புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் உள்ளன நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளில் 24 இடங்களில் திமுகவும் 8 இடங்களில் அதிமுகவும் 6 இடங்களில் சுயேட்சைகளும் மற்றும் ஒரு இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 8 பேரூராட்சிகளில் 7 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
இதில் கீரமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக 10 இடத்திலும் காங்கிரஸ் சிபிஐ மற்றும் சிபிஎம் தலா ஒரு இடங்களில் மற்றும் சுயேட்சைகள் இரண்டு இடத்திலும் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. ஆலங்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிகளில் திமுக 9 இடங்களையும் அதிமுக இரண்டு இடங்களையும் சுயேட்சைகள் 4 இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
இலுப்பூர் பேரூராட்சியில் திமுக 7 இடத்திலும் அதிமுக 3 இடங்களிலும் மற்றும் சுயேட்சைகள் 5 இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.அரிமளம் பேரூராட்சியில் திமுக 8 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் சுயச்சை இரண்டு இடங்களிலும் தேமுதிக இரண்டு இடங்களிலும் அதிமுக ஒரு இடத்திலும் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.
கறம்பக்குடி பேரூராட்சியில் திமுக 10 இடங்களையும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் அதிமுக இரண்டு இடத்திலும் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.பொன்னமராவதி பேரூராட்சியில் திமுக 10 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் அதிமுக 3 இடங்களிலும் மற்றும் சுயேட்சை ஒரு இடத்திலும் பிடித்து வெற்றி பெற்றுள்ளது.
அன்னவாசல் பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியுள்ளது:
இதில் மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 8 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் திமுக 5 இடங்களிலும் மற்றும் சுயேட்சை ஒரு இடத்திலும் பிடித்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது அன்னவாசல் பேரூராட்சி மட்டும் அதிமுக கைப்பற்றியது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியை ஏற்றுக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu