புதுக்கோட்டையில் களைகட்டிய செஸ் போட்டி: 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை டிஎல்சி பள்ளியில் நடைபெற்ற போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடும் சிறுவர்கள்.
தமிழகத்தில் ஜூலை மாதத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழக முதலமைச்சர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துவருகிறார்.
மேலும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கான பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் தற்பொழுது சென்னையில் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பதால் செஸ் விளையாடும் வீரர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.
செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாத் ஆனந்த் போன்ற பல்வேறு வீரர்கள் பல்வேறு வகையில் வெற்றிவாகை சூடியுள்ள நிலையில், தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் வீரர்கள் இடத்தில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதனை வரவேற்கும் விதத்தில் புதுக்கோட்டை மாஸ்டர்ஸ் செஸ் அகடமி சார்பில் என்று டிஎல்சி பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான செஸ் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று ஆர்வத்துடன் செஸ் போட்டியை விளையாடி வருகின்றனர்.
மேலும் இந்த போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மேலும் பெரியவர்களுக்கான செஸ் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் 9,11,13,15 வயது பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசுகளும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட இருக்கின்றது.
இந்த போட்டியினை மாஸ்டர் செஸ் அகடமி நிர்வாகிகள் அருள் செந்தில், பார்த்திபன், வீரபாண்டியன் ,முகமது இக்பால், முகமது சபியுல்லா, ஷேக் முகமது ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu