கோவில்பட்டி அரசு பள்ளியில் இன்று தடுப்பூசி முகாம்

கோவில்பட்டி அரசு பள்ளியில் இன்று தடுப்பூசி முகாம்
X

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி அரசு பள்ளியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது

புதுக்கோட்டை கோவில்பட்டி 4வது வார்டில் பொதுமக்களுக்கு தடுப்பூசி முகாம் அரசு பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட கோவில்பட்டி அரசு பள்ளியில் இன்று கோவிட் சில்டு, கோவாக்சின் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை கோவில்பட்டி 4வது வார்டு திமுக சார்பில் தடுப்பூசி முகாம் அரசு பள்ளி வளாகத்தில் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் கோவில்பட்டியை சுற்றியுள்ள பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக வந்தனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொது மக்களுக்கு மருத்துவர்கள் மூலம் பிபி சக்கரை ,ரத்த அழுத்தப் பரிசோதனையை உள்ளிட்டவைகள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு செவிலியர்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டது.

இந்த தடுப்பூசி முகாமில் புதுக்கோட்டை நகர கழக செயலாளர் நைனா முகமது, கோவில்பட்டி 4வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நாகராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் அடைக்கலம், கண்மணி சுப்பு ,ராமசாமி, சலிம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story