தூத்துக்குடியில் இருந்து ரயிலில் புதுக்கோட்டைக்கு வந்த யூரியா: எம்எல்ஏ ஆய்வு

தூத்துக்குடியில் இருந்து ரயிலில் புதுக்கோட்டைக்கு  வந்த யூரியா: எம்எல்ஏ ஆய்வு
X

புதுக்கோட்டைக்கு ரயில் மூலம் வந்த யூரியா உரங்களை எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு செய்தார் அருகில் திமுக மாவட்ட பொருளாளர் செந்தில்

தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து ரயில் மூலமாக 22 பெட்டிகளில் இன்று 1600 டன் யூரியா கொண்டுவரப்பட்டது

தூத்துக்குடியிலிருந்து இன்று ரயில் மூலம் புதுக்கோட்டைக்கு வந்த 1600 மெட்ரிக் டன் யூரியா உரங்களை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 73 ஆயிரத்து 257 எக்டர் பரப்பளவில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்காக யூரியா வேளாண் துறையால் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. தற்போது மழை நின்று விட்டதால் நீர் வடிய தொடங்கியுள்ளது.



இந்த சூழ்நிலையில், விவசாயிகளுக்கு யூரியா தங்குதடையின்றி கிடைப்பதற்கும், பயிர்களை காப்பாற்றுவதற்கும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது.புதுக்கோட்டை மாவட்ட தேவைக்காக, தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து ரயில் மூலமாக 22 பெட்டிகளில் இன்று 1600 மெட்ரிக் டன் யூரியா கொண்டுவரப்பட்டது.

யூரியா மூட்டைகள் ரயிலிலிருந்து லாரிக்கு மாற்றப்பட்டு லாரிகள் மூலமாக கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த பணிகளை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, வேளாண் இணை இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!