புதுக்கோட்டையில் தொடர் மழையின் காரணமாக களை கட்டிய குடை விற்பனை

புதுக்கோட்டையில் தொடர் மழையின் காரணமாக  களை கட்டிய குடை விற்பனை
X

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே தொடர் மழையின் காரணமாக களைகட்டிய குடை விற்பனை

மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால், குடை வியாபாரம் செய்யும் கடைகளில் பலவகையான குடைகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்

தொடர் மழையின் காரணமாக குடை விற்பனை களை கட்டியது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நவம்பர் 4 -ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தரைக்கடை வியாபாரிகள் தற்போது பல்வேறு பகுதிகளில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் பணியை துவங்கி உள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தரைக்கடை வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்து வரும் நிலையில், இன்று புதுக்கோட்டை கீழராஜ வீதியில் காலை முதலே லேசான வெயில் அடித்து வந்த நிலையில், கீழ ராஜ வீதியில் தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென மதியம் பலத்த மழை பெய்ததால் கீழராஜ வீதியில் கூடி இருந்த கூட்டம் கலைந்து சென்றது.

இதனால், தரைக்கடை வியாபாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த பொருள்களை, தார்ப்பாய்கள் கொண்டு மூடி வைத்து வியாபாரம் இல்லாமல் இருந்து வந்தனர். இது ஒருபுறமிருக்க தொடர் மழை பெய்து கொண்டிருந்ததால் கீழராஜ வீதியில் குடை வியாபாரம் சூடு பிடித்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், குடை வியாபாரம் செய்யும் கடைகளில், பொதுமக்கள் கூடி பல்வேறு வகையான குடைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை, பல்வேறு வடிவில் குடைகள் விற்பனைக்கு வந்துள்ளதால் தொடர்ந்து மழை காலம் என்பதால் ஆர்வத்துடன் பொதுமக்கள் குடைகளை வாங்கி சென்றனர்.


Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!