புதுக்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு: பொதுமக்கள் அச்சம்

புதுக்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டு: பொதுமக்கள் அச்சம்
X

புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகே நேற்று இரவு இருசக்கர வாகனம் திருடுபோன தேனீர் கடை.

புதுக்கோட்டையில் சமீப காலமாகவே சாலையாேரங்களில் நிறுத்தி வைக்கும் இருசக்கர வாகனங்கள் திருடுபோவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

புதுக்கோட்டை நகர பகுதியில் சமீப காலமாகவே சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கும் இருசக்கர வாகனங்கள் திருடு போவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிருந்தாவனம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 4 இருசக்கர வாகனங்கள் திருடு போய் உள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு நெய்க்கொடடான் மரம் அருகே உள்ள தேனீர் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை 2 மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை திருடும் காட்சி தேனீர் கடையில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தொடர்ந்து புதுக்கோட்டை நகரில் சாலையில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திருடு போகும் சம்பவத்தை தடுக்க போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை உடனே பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business