நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்து அறிவுரைகளை வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் தேர்தல் பணியாற்ற உள்ள 1600 அரசு ஊழியர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாமை ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள் 8 பேரூராட்சிகளில் பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் தேர்தலில் பணியாற்றும் 1600 பணியாளர்களுக்கு பலகட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக முதல்நிலை வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் இரண்டாம் நிலை வாக்குச்சாவடி அலுவலர்கள் 800 பேருக்கு புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்து பேசுகையில், வாக்குச்சாவடியில் பணியாற்றும் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்கள் தற்போது பயிற்சியில் கலந்து கொண்டுள்ளீர்கள். ஏற்கெனவே உங்களுக்கு அது அளவு தேர்தலை பணியாற்றி அனுபவம் உள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்தில் நடக்க உள்ள தேர்தலை நேர்மையாகவும் எந்த விதமான முறைகேடும் இல்லாமல் நடப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையேட்டில் உள்ள விதிமுறைகளை நன்றாக படித்து பார்த்து, அதன்பிறகு நீங்கள் உங்களது பணியை ஆற்ற வேண்டும். குறிப்பாக தேர்தல் தினத்தன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கவனமாக கையாள வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu