மாநில அளவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம்

மாநில அளவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம்
X

பயிற்ச்சி முகாமை துவக்கி வைத்த கலெக்டர்.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் கலைஞர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் தொடங்கியது.

புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் தொடங்கப்பட்ட முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலைஞர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:

முதல்வரின் கனவுத் திட்டமாக உள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கிராமங்கள் தோறும் எடுத்துச் செல்ல கலைஞர்கள் உதவ வேண்டும். மாவட்டத்தில் 2,500 பேர் கல்வியை இடையில் நிறுத்தி உள்ளனர். அவர்கள் மீண்டும் கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

இத்திட்டத்தின் நோக்கம் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கலைஞர்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முகாமில் ஆவுடையார்கோவில் அரசு பள்ளியில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் காளிதாஸ் மற்றும் அவரது தங்கை ஆகிய 2 பேரும் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக விழிப்புணர்வு பாடலைப் பாடி அசத்தினர்.

இவர்கள் பாடிய பாடலை கேட்டு அனைவரும் அவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கான விழிப்புணர்வு பாடலை பாடி அசத்திய காளிதாஸ் மற்றும் அவரது தங்கைக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பொன்னாடைகள் போர்த்தி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இல்லம் தேடிக் கல்வித்திட்ட உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் தமிழ்நாடு அனைத்து நாடக கலைஞர் சங்க மாநில செயலாளர் சின்ன பொண்ணு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil