புதுக்கோட்டை சிறைச்சாலையில் பீடி கட்டுகளை வீசி எறிந்த 3 பேர் கைது

புதுக்கோட்டை சிறைச்சாலையில் பீடி கட்டுகளை வீசி எறிந்த 3 பேர்  கைது
X
புதுக்கோட்டை சிறைச்சாலையில் கைதியை பார்க்க வந்த உறவினர்கள் பீடி கட்டுகள் மற்றும் தீப்பெட்டிகளை வீசி சென்றதல் பரபரப்பு
புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கும்பகோணத்தை சேர்ந்த தனசேகர் என்ற கைதியைப் பார்க்க வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்

புதுக்கோட்டை சிறைச்சாலையில் பிடி கட்டுகளை தூக்கி எறிந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு.

புதுக்கோட்டை சிறையில் கும்பகோணத்தை சேர்ந்த தனசேகர் ( 29) கைதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரை பார்ப்பதற்காக கும்பகோணத்தை அவருடைய உறவினர்கள் சந்திரசேகரன், வெங்கடேசன், ஜிந்த் ஆகியோர் நேற்று முன் தினம் புதுக்கோட்டை வந்தனர்.

புதுக்கோட்டை சிறையில் கைதியாக உள்ள தனசேகர் சந்திக்க சிறைக்காவலர்களிடம் அனுமதி பெற்று உள்ளே சென்ற போது அவர்களை சிறைக் காவலர்கள் சோதனை செய்தனர்.சோதனை செய்த போது உடைகளின் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீடி கட்டுகள், தீப்பெட்டிகள் இருந்துள்ளன.

இதனால் காவலர்கள் மறைத்து வைத்திருந்த பீடி பண்டல்கள் மற்றும் தீப்பட்டி களை தனியாக வெளியே எடுத்து வைத்தத பின் பார்க்க அனுமதித்தனர்.பின்னர் சிறையிலிருந்து வெளிவந்த மூன்று பேரும் பீடிகட்டுகள் தீப்பெட்டியை கிளை சிறைக்குள் தூக்கி வீசியுள்ளனர்.இதனை கண்ட சிறைக் காவலர்கள் உடனடியாக மூன்று பேரையும் பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வழக்கு பதிவு செய்து நகர காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.அவர்களிடமிருந்து 4 பீடி கட்டுகளையும், தீப்பெட்டிகளையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.சிறை சாலையில் உள்ள கைதி சந்திக்க வந்த உறவினர்கள் பீடி கட்டுங்கள் மற்றும் தீப்பெட்டி உள்ளே தூக்கி வீசிய சம்பவம் சிறைச்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது .

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!