புதுக்கோட்டையில் நள்ளிரவில் தவித்த பொதுமக்கள், உதவிய கலெக்டர்

புதுக்கோட்டையில் நேற்று நள்ளிரவு பஸ் வசதி இல்லாமல் தவித்த பொதுமக்களுக்கு தங்க இடவசதி அளித்து உதவினார் கலெக்டர் உமா மகேஸ்வரி. இந்த செயல் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

தமிழக அரசு நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. அதன்படி இரவு 9 மணியிலிருந்து, காலை நான்கு மாறி அரசு பேருந்து, தனியார் பேருந்து என அனைத்தும் இயங்காது என அறிவித்திருந்தது.

நேற்று இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆய்வுகளை மேற்கொண்டார்.

அப்போது தங்கள் பகுதிகளுக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாமல் தவித்து வந்த 30க்கும் மேற்பட்டோரை புதுக்கோட்டை நகராட்சியில் அலுவலகத்தில் தங்குவதற்கு இடம் ஒதுக்கி பின்னர் அவர்களை நகராட்சி வாகனம் மூலம் நகராட்சிக்கு அழைத்துச் சென்றனர் பின்னர் காலையில் தங்கள் ஊருக்கு செல்வதற்கு நகராட்சி மூலம் பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டனர்.

பேருந்து இல்லாமல் தவித்து வந்த பொது மக்களுக்கு உடனடி நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த பொதுமக்களுக்கு தங்குவதற்கு இடவசதி ஒதுக்கி கொடுத்து அவர்கள் காலையில் ஊர் செல்வதற்கு உதவி செய்த மாவட்ட ஆட்சியரின் செயல் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றது.

இந்த இரவு நேர ஊரடங்கு ஆய்வில் கோட்டாட்சியர் டெய்சி குமார் நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் தாசில்தார் முருகப்பன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers