மின்வாரிய அலுவலகத்தில் குளம்போல் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி

மின்வாரிய அலுவலகத்தில் குளம்போல் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதி
X

மின்வாரிய அலுவலகத்தில் குளம்போல் தேங்கி நின்ற மழைநீர்.

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றதால் மின் கட்டணம் கட்ட வந்த பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது அடுத்து கடந்த 15 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றதால் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் மற்றும் மின் கட்டணம் கட்ட வந்த பொதுமக்கள் என பலரும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

தொடர்ந்து பெய்த கன மழையால் மின் வாரிய அலுவலகத்தில் கழிவுநீர் மற்றும் மழை நீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த மிகுந்த சிரமம் அடைந்து மின் அலுவலகத்திற்குள் சென்றனர்.

மின்கட்டணம் கட்டப்படும் பகுதி மற்றும் அதிகாரிகள் இருக்கும் பகுதி என அனைத்து இடங்களிலும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால் நோய் தொற்று பரவ கூடிய சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே உடனடியாக மழைநீரை அகற்ற மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!