புதுக்கோட்டையில் கேரள அன்னாசி பழங்களை ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் பொதுமக்கள்

புதுக்கோட்டையில் கேரள அன்னாசி பழங்களை ஆர்வமுடன் வாங்கிச்செல்லும் பொதுமக்கள்
X

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி அருகே கேரளாவிலிருந்து விற்பனைக்கு வந்துள்ள அன்னாசி பழங்கள்.

புதுக்கோட்டையில் கேரளாவில் இருந்து விற்பனைக்கு வந்துள்ள அன்னாசி பழங்கள் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகத்தில் தற்போது மார்கழி மாசத்தில் குளிர்காலம் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக காலை வேளைகளில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் சற்று குறைந்து வருகிறது.

தொடர்ந்து குளிர்காலம் என்பதால் அதிக அளவில் சளி, இருமல் உள்ளிட்ட நோய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில் சளி இருமல் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதற்கு மருந்தாக அண்ணாச்சி பழம் இருந்து வருவதால், குளிர்காலங்களில் அதிக அளவில் அன்னாசிப் பழங்கள் பல்வேறு மாவட்டங்களில் விற்பனைக்கு வருகிறது.

அதேபோல் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி அருகே கேரளாவில் இருந்து டன் கணக்கில் தற்பொழுது அன்னாசிப் பழங்கள் விற்பனைக்கு வந்து இறங்கியுள்ளது.

அன்னாசிப் பழம் 3 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனை ஆர்வத்துடன் பொதுமக்களும் வாங்கிச் செல்கின்றனர்.

Tags

Next Story
ai automation digital future