மெகா தடுப்பூசி முகாமில் 1.37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு(பைல்படம்)
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவின்படி வரும் 10 -ஆம் தேதிநடைபெறவுள்ள 5 -ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 1. 37 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் 64 சதவீதம் முதல் தவணைத் தடுப்பூசியும் 19% இரண்டாவது தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்களுக்கு 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.94 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பதிவு செய்துள்ளனர் வரும் 10 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் 735 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது போதுமான அளவு தடுப்பூசிகள் உள்ளது.மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு 92% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் 136 ஊராட்சிகளில் 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு 57 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து நடமாடும் கொள்முதல் நிலையங்களும் செயல்பட்டு வருகிறது .விவசாயிகள் அதிகளவு நெல் மூட்டைகள் உள்ளதாக தகவல் தெரிவித்தால், உடனடியாக அந்த இடத்திற்கு நேரடியாக சென்று அவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu