விவசாயிகள் வைத்த கோரிக்கைகளில் ஒன்றை மட்டும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் பொதுக்குழு கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேசுகிறார்
புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்
பின்னர் செய்தியாளரிடம் பாலகிருஷ்ணன் கூறியதாவது: மத்திய அரசு யாரையும் ஆலோசிக்காமல் எவ்வாறு மூன்று வேளை சட்டங்களை கொண்டு வந்ததோ அதே போன்று யாரையும் கலந்து ஆலோசிக்காமல் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்துள்ளது.
ஆனால், விவசாயிகள் வைத்த கோரிக்கையான அனைத்து பயிர்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் மற்றும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து தான் தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது மத்திய அரசு முதல் கோரிக்கையை மட்டும் ரத்து செய்துள்ளது மீதமுள்ள இரண்டு கோரிக்கைகளும் ரத்து செய்ய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் எங்களது இரண்டு கோரிக்கைகளை ரத்து செய்யும் வரை எங்களுடைய போராட்டம் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து நாங்கள் முடிவு செய்து அறிவிப்போம். தமிழகத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து தமிழக அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை. எனவே தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து ஒரு ஹெட்டேருக்கு ரூ 20 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்து மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்தக் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu