சர்வதேச கடல்எல்லைபகுதியில் மீன் பிடிப்பதற்கான சூழ்நிலையை முதல்வர் உருவாக்குவார்

சர்வதேச கடல்எல்லைபகுதியில் மீன் பிடிப்பதற்கான சூழ்நிலையை  முதல்வர் உருவாக்குவார்
X

புதுக்கோட்டை பாலன் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பயனாளிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒப்படைக்கப்பட்டது

இலங்கை கடற்படையினர் மீது, தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய முடியாது. ஒன்றிய அரசு மூலமாக தான் அதை செய்ய முடியும்

சர்வதேச எல்லை அருகே உள்ள பொதுவான கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு சாதகமான சூழ்நிலையை தமிழக முதல்வர் உருவாக்கி வருகிறார் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

புதுக்கோட்டை பாலன் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பயனாளிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்து குடியிருப்புகள் ஒதுக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது . இதில், அமைச்சர் ரகுபதி ஆட்சியர் கவிதா ராமு சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு வீடுகளை தேர்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மீனவரின் உடல் தமிழக முதல்வர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் வலியுறுத்ததின் பெயரிலேயே தற்போது சொந்த ஊருக்கு அவரது உடல் கொண்டுவரப்படுகிறது. ராஜ்கிரணிக் உடல் தற்போது கோட்டை பட்டினத்திற்கு கொண்டு வருவதற்கு காரணமே தமிழக முதல்வர்தான் அவர்தான் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உடலை மீட்டு கொண்டு வந்துள்ளார்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வருகின்றனர் நம்முடைய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக்கு அருகே உள்ள ஜீரோ ஷோன் என்று அழைக்கப்படும் பொது எல்லைப் பகுதியில் தான் மீன்பிடித்து வருகின்றனர். திட்டமிட்டு இலங்கை கடற்படையினர் அங்கு வந்து தமிழக மீனவர்களை கைது செய்கின்றனர்

இந்தப் பிரச்சனைக்கு ஒன்றிய அரசுதான் தீர்வு காண வேண்டும் எல்லைப் பிரச்னை தொடர்பாக ஒன்றிய அரசு நிரந்திர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. தமிழக அரசு முயற்சியால்தான் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரின் தாக்கப்படும் போது அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இனிவரும் காலங்களில் சர்வதேச எல்லைக்கு அருகே கடல் பகுதியில் நம் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு உண்டான வழிவகையை தமிழக முதல்வர் எடுத்து வருகிறார்.தமிழக கடற்பகுதியில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதுயோ மஞ்சள் கடத்தப்படுவதை மிழக அரசு ஊக்கு வைப்பது கிடையாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளிலிருந்து போதைப்பொருள் கடத்தப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. தமிழக அரசிற்கு போதைப் பொருள் கடத்தப்படுவது தெரிய வந்தால் உடனடியாக அதை தடுத்து நிறுத்தும் பணியில் அரசு செய்து வருகிறது. இலங்கை கடற்படையினர் மீது, தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய முடியாது. ஒன்றிய அரசு மூலமாக தான் இது நடக்க வேண்டும். நாம் ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி தமிழக மீனவர்களை அழைத்து வருகிறோம் என்றார்.


Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil