புதுக்கோட்டை - டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை - டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை, சாந்தநாதபுரத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு, புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐடியூசி மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் சிங்கமுத்து, மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் ஏஐடியுசி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஜீவானந்தம், ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியன், சகாயராஜ், முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து தர வேண்டும், வாரவிடுமுறை அளிக்க வேண்டும், இறந்த பணியாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும், கேரள மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளின் நிர்வாக முறை போல் டாஸ்மாக் நிர்வாக முறையை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இதில் டாஸ்மார்க் பணியாளர்கள் மற்றும் ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!