சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறாதது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்
புதுக்கோட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறாதது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து அதற்கான பயிற்சி மையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்.
புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊராட்சிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. ஊராட்சிகளுக்கு தேவையான பொருட்களை மாநில அளவில் டெண்டர் விட்டு அதில் முறைகேடு நடந்து வந்தது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை தமிழக அரசு செய்ய வேண்டும்.
நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு என்று ஒருங்கிணைந்த சட்டம் உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். நாடாளுமன்றம் சட்டமன்றம் என்று 2 ஆட்சிமுறை உள்ளதோ அதே போன்று மூன்றாவது ஆட்சி முறையாக உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டும். ஹெச். ராஜா அவர் குழம்புவதை விட மற்றவர்களை குழப்புவது தான் அவருடைய வேலை. கல்வி தரத்தை உயர்த்துவதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை..ஆனால், அந்தக் கல்வி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். படிப்படியாக கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது
ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவு தேர்ச்சி பெறவில்லை. இது குறித்து ஆய்வு செய்து ,தமிழக மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான பயிற்சி மையங்களை அரசேஉருவாக்க வேண்டும். சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலை போன்றது அல்ல ஊரக உள்ளாட்சி தேர்தல்.இதனால்தான் கூட்டணிகள் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 99% நடைமுறைக்கு ஒத்துவராது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு முறை என்பது தேவையற்றது. 2024 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணையும் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையும் தேவை ஏற்படுகிறது. சூழ்நிலை மாறும் போது எதிரணி என்பது அவசியமாகிறது. சீமான் மற்றும் கமலஹாசன் ஆகியோரின் கருத்துகள் முழுக்க முழுக்க மக்களுக்கு விரோதமானது
ஏழை எளிய மக்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள் பயன்பெறுவது 100 நாள் வேலைத்திட்டத்தில் தான் அதை மூட வேண்டும் என்று கூறுவது தவறு.கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடன் தள்ளுபடி வழங்கும் போது இவர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்காதது ஏன்.சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் மத்திய அரசுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் தான் விசுவாசமாக உள்ளனர்.அடித்தட்டு மக்கள் மீது அக்கறை உள்ள எந்த கட்சியும் நூறு நாள் வேலைத் திட்டத்தை எதிர்க்க மாட்டார்கள் என்றார் பாலகிருஷ்ணன். பேட்டியின் போது, அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கவிவர்மன் மற்றும் விவசாய சங்க நிர்வாகி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu