ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி இன்ட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி இன்ட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு
X

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி    இன்ட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள்   பணியேற்பு விழா நடைபெற்றது

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இன்ட்ராக்ட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை வகித்தார்.முன்னாள் தலைவர்கள் ஜெய் பார்த்தீபன், வெங்கடாசலம், ஓவியர் ரவி, மனோகரன், சத்தியராஜ், வைத்தீஸ்வரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மௌண்ட் சியோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயக்குநர் டாக்டர். ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய இன்ட்ராக்ட் நிர்வாகிகளுக்கு பணியேற்பு செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இன்ட்ராக்ட் சங்கத்தின் புதிய தலைவராக மணிவாசன், செயலாளராக அஸ்வின் குமார், பொருளாளராக தங்கதரணி ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகிகள் பணியேற்றுக் கொண்டனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம்மூர்த்தி, ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, ரோட்டரி துணை ஆளுநர் சிவாஜி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

இந்நிகழ்வில் முககவசம் விழிப்புணர்வு மற்றும் சேமிக்கும் எண்ணத்தை வளர்க்க மண்ணாலான உண்டியல்களை மாணவர்களுக்கு வழங்கியும் சேவை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை சங்கத்தின் இன்ட்ராக்ட் தலைவர் ஜான் பிரபு, பள்ளியின் இன்ட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தி, ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!