புதுக்கோட்டையில் வீடுகளுக்குள் புகுந்து விடும் பாம்புகளால் மக்கள் அவதி

புதுக்கோட்டையில் வீடுகளுக்குள் புகுந்து விடும் பாம்புகளால் மக்கள் அவதி
X

புதுக்கோட்டை பெரியார் நகரில் நான்கு அடி நீளமுள்ள தண்ணீர் பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்.

புதுக்கோட்டையில் வீடுகளுக்குள் புகுந்து விடும் பாம்புகளால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

புதுக்கோட்டை நகர பகுதிகளில் தினம் தோறும் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விடுகிறது. தீயணைப்பு துறையினர் தினம்தோறும் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு வீடுகளில் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் 5 அடி 6அடி என மலைப்பாம்புகள் பிடிபட்டு வருகிறது.தற்போது கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி உள்ளதால் காடுகளிலிருந்து இரைக்காகவும் தண்ணீருக்காகவும் வீடுகளுக்குள் புகுந்து விடும் பாம்புகளால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்து வருகின்றனர்.

குறிப்பாக புதுக்கோட்டை நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் அடர்ந்த கருவேல மரங்கள் மண்டி கிடப்பதால் அதிக அளவில் பொதுமக்கள் பாம்பினால் பெரும் அச்சப்பட்டு வரும் சூழ்நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று பெரியார் நகர் பகுதியில் நான்கடி நீளம் உள்ள தண்ணீர் பாம்பு வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்குள் சென்று விட்டது.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் கிடந்த 4 அடி நீளமுள்ள தண்ணீர் பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் போட்டு காட்டு பகுதியில் விடுவதற்கே எடுத்துச் சென்றனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை நகர பகுதிகளில் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!