புதுக்கோட்டையில் விலைவாசி உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் விலைவாசி உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விலைவாசி மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விலைவாசி மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட துணைத்தலைவர்கள் முகமது இப்ராகிம், சாதிப் பாஷா, மாவட்ட செயலாளர் அப்துல் அக்கீம், சதக்கத்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் பகுர்தீன் மாவட்ட பொருளாளர் ஆதம்பாவா உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் 15க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து ஜிஎஸ்டி வரி உயர்வை குறைக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சாமானிய மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story
ai automation in agriculture