புதுக்கோட்டையில் தீபாவளி பட்டாசு விற்பனை: அமைச்சர் துவக்கி வைப்பு

புதுக்கோட்டையில் தீபாவளி பட்டாசு விற்பனை:  அமைச்சர் துவக்கி வைப்பு
X

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் பட்டாசு கடை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

புதுக்கோட்டையில் தீபாவளி பட்டாசு விற்பனையை துவக்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையாக இருந்து வருவது தீபாவளி பண்டிகைதான். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி தீபாவளி பண்டிகையில் மிக முக்கியமானது பட்டாசு வகைகள். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து புத்தாடை உடுத்தி தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் பட்டாசுகளை பொதுமக்கள் அதிக அளவில் வாங்குவதை ஊக்குவிக்கும் விதத்தில் தமிழக அரசு வருடம் தோறும் புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சார்பில் பட்டாசு கடைகள் துவக்கி விற்பனை செய்து வருகிறது.

அதன்படிஇன்று புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் அமைக்கப்பட்ட பட்டாசு கடையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு விற்பனையை துவக்கி வைத்தார். இந்தநிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!