மறைந்த காவலருக்கு நிதி உதவி வழங்கிய புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன்
புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி கான காசோலையில் வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன்
தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து அரசு துறையிலும் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது மேலும் அந்தந்த துறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்தந்த சங்கங்கள் மூலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும் மேலும் சங்கங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் யாரேனும் இறந்துவிட்டால் அந்த சங்கங்கள் மூலமாக தமிழக அரசிடம் நிதி பெறுவது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
ஆனால் சங்கங்கள் இல்லாமல் செயல்படும் ஒரே அரசு பணி காவல் துறை பணி மட்டும்தான் காவல் துறையில் மட்டும்தான் காவலர்க்கு என ஒரு சங்கம் அமைக்கப்படாமல் செயல்பட்டு வரும் அரசு துறை பணியாக இருந்து வருகிறது.மேலும் காவலர்கள் ஏதேனும் விபத்தில் இறந்து விட்டால் தமிழக அரசு மூலமாக நிதி பெறப்பட்டது மறைந்த காவலர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏதேனும் அரசு வேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு சார்பில் வழங்கப்படும் நிதியோ அல்லது வேலை வாய்ப்போ காலம் கடந்துதான் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கிடைக்கும் சூழ் நிலை இருந்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டே தமிழகம் முழுவதும் 1997ம் ஆம் ஆண்டு பணிபுரிந்த காவலர்கள் செகண்ட் பேச் என்ற ஒரு வாட்ஸ்அப் குழுவினை தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் காவலர்களை ஒன்று சேர்த்து வாட்ஸ்அப் குழுவினை உருவாக்கி அந்த வாட்ஸ் அப் குழு மூலம் அதில் உள்ள காவல் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு பணியின் போது மரணம் ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் விதத்தில் அத வாட்ஸ்அப் குழுவில் உள்ள காவலர்கள் ஒன்று சேர்ந்து இதுவரைக்கும் 23 காவலர்களுக்கு 2 கோடி 39 லட்சத்தி 9 ஆயிரத்தி 94 ரூபாய் நிதி உதவியை வழங்கியுள்ளனர். சிறப்பித்துள்ளனர்.
மேலும் தற்போது 24 வது நபராக தமிழ்நாடு காவல்துறையில் 1997ஆம் ஆண்டு பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த தலைமை காவலர் கண்ணன் அயல் பணியாக கோயமுத்தூர் பணிபுரிந்து வந்த போது கடந்த 20.05.21 வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..
மேலும் அவருடைய குடும்பத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் சிரமம் அடைந்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவி செய்யும் விதத்தில் இன்று புதுக்கோட்டை ஆயுதப்படை மைதான வளாகத்தில் 1997 செகண்ட் பேட்ச் காவல் பயிற்சி நண்பர்கள் அனைவரும் ஒன்றாக திரட்டிய ரூபாய் பதிமூன்று லட்சத்து 37 ஆயிரத்து 500 ருபாய்யை அவருடைய குடும்பத்தாரிடம் இன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கலந்து கொண்டு அந்தத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் பேசுவதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் முற்பட்டபோது பேச்சு வராமல் கண்ணீர் மல்க மேடையிலிருந்து இறங்கிச்சென்றுவிட்டார் இதனை பார்த்த மற்ற காவலர்களும் கண்ணீர் வடித்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. இந்த நிகழ்வில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், கரூர், திருச்சி, உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணிபுரியும் காவலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu