மதுபான விலையை குறைக்க வேண்டும் அரசுக்கு புதுக்கோட்டை மதுபிரியர்கள் கோரிக்கை

மதுபான விலையை குறைக்க வேண்டும் அரசுக்கு புதுக்கோட்டை மதுபிரியர்கள் கோரிக்கை
X

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மதுபானக் கடை முன்பு மதுபானத்திற்கு 10 ரூபாய் அரசு விலை உயர்த்தியுள்ளது கண்டித்து முழக்கமிட்ட மதுப்பிரியர்

இதுபோல விலை உயர்வு ஏற்பட்டால் குடிப்பதை நிறுத்தி விடலாம் என்ற நிலைக்கு மதுப்பிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்

மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டும் என்றப புதுக்கோட்டையைச் சேர்ந்த குடிமகன்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசுக்கு அதிக அளவில் வருமானம் ஈட்டும் துறையாக அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு சார்பில் இலவச திட்டங்களுக்கு பல்வேறு வகையில், பல்வேறு துறையின் சார்பில் நிதிகள் பெறப்பட்டாலும் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு துறையாக அரசு மதுபானக்கடைகள் இருந்து வருகிறது.

மேலும், தமிழக அரசு நேற்று திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் அரசு மதுபான கடைகளில் குவாட்டருக்கு பத்து ரூபாயும் பீருக்கு 10 ரூபாயும் என அனைத்து மது வகைகளுக்கும் திடீரென விலையை உயர்த்தியுள்ளது. குடி மகன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே அரசு மதுபான கடைகளில் மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட ஐந்து ரூபாய் பத்து ரூபாய் விலை அதிகம் வைத்து விற்பனை செய்யும் நிலையில் தமிழக அரசு அனைத்து வகையான மது பாட்டிலுக்கும் பத்து ரூபாய் விலை உயர்த்தி உள்ளது. குடிமகன்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றும் தொடர்ந்து, இதுபோல விலை உயர்வு ஏற்பட்டால் குடிப்பதை நிறுத்தி விடலாம் என்றும், குடிமகன்கள் மது பாட்டில்களுக்கு விலையை குறைக்க வேண்டும் என வேதனையுடன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!