யோகாவில் உலக சாதனை படைத்த புதுக்கோட்டை ஆத்மா யோகா மையத்துக்கு சான்று..

Atmayoga in Tamil
X

Atmayoga in Tamil

Atmayoga in Tamil-ஒவ்வொரு பங்கேற்பாளரும் 10 யோகாசனங்கள் வீதம் 8750 யோகாசனங்களை ஒரே நாளில் 8750 மனித ஆற்றல் நிமிடங்களில் செய்து காட்டினர்

புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் யோகாவில் உலக சதனை படைத்தது.

Atmayoga in Tamil-புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் சார்பாக புத்தாண்டில் புதிய உலக சாதனை படைப்போம் என்ற மந்திரத்தை முன்னெடுத்து சென்னையில் உள்ள யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை நிறுவனத்துடன் இணைந்து யோகா உலக சாதனை நிகழ்ச்சியினை Zoom ஆன்லைன் மூலம் நடத்தியது.

இந்த நிகழ்வில் சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் 875 மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், யோகா ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு பங்கேற்பாளரும் 10 யோகாசனகள் வீதம் 8750 யோகாசனங்களை ஒரே நாளில் 8750 மனித ஆற்றல் நிமிடங்களில் பல்வேறு இடங்களில் இருந்து செய்து உலக சாதனை செய்தனர்.

இச்சாதனையினை யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் அங்கீகாரம் செய்து ஆத்மா யோகா மையத்திற்கும் அதன் நிறுவனர் யோகா ஆசிரியர் ரெ.பாண்டியன், செயலாளர் யோகினி புவனேஸ்வரி பாண்டியன் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா திருவப்பூர் பி.வி.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரினா போகம் கலந்து கொண்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார். யோகா உலக சாதனைக்கான சான்றிதழை யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்டு நிர்வாக தலைவர் பாபு பாலகிருஷ்ணன் வழங்கி பாராட்டினார்.

அகில உலக சிரிப்பு யோகா சம்மேளனத்தின் தலைவர் கோபாலனந்தா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம், குழந்தைகள் நல மருத்துவர் எஸ். ராமதாஸ், அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், வைரவன், கதிரேசன் தாவரவியல் ஆராய்ச்சியாளர் வரிசைமுகமது, மரம் நண்பர்கள் நிர்வாகி கண்ணன் (எ) ராதாகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக் மெஸ் மூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், அக்கு நித்தியானந்தா, சமூக ஆர்வளர் பிரசாத் மற்றும் ஆத்மா யோகா நிர்வாகிகள் பாண்டியன், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சாதனையாளர்களைப் பாராட்டினார்கள். ஏற்பாடுகளை, ஆத்மா யோகா மைய யோகா ஆசிரியர்கள் அமுதா, விக்னேஷ், விஸ்வேஷ்வரன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து