சமூக ஆர்வலர் அருண்மொழி பிறந்தநாளையொட்டி, நலத்திட்டங்கள் வழங்கிய அமைச்சர்கள்

சமூக ஆர்வலர் அருண்மொழி  பிறந்தநாளையொட்டி, நலத்திட்டங்கள் வழங்கிய அமைச்சர்கள்
X

புதுக்கோட்டையில் மறைந்த சமூக ஆர்வலர் அருண்மொழியின் பிறந்தநாளையொட்டி அமைச்சர்கள் மெய்யதாதன், ரகுபதி ஆகியோர் நல திட்ட உதவிகளை வழங்கினர்.

புதுக்கோட்டையில் மறைந்த சமூக ஆர்வலர் அருண்மொழியின் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.

மறைந்த சமூக ஆர்வலர் அருன்மொழியின் பிறந்தநாளையொட்டி அவருடைய நண்பர்கள் மற்றும் ஓயாத அலைகள் அறக்கட்டளை சார்பில் பிருந்தாவனம் அருகே கொரோன தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் முன் களப்பணியாளர்கள் 50 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களையும் மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் அருன்மொழியின் நண்பர்கள் மற்றும் ஓயாத அலைகள் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்