புதுக்கோட்டை நகராட்சி தேர்தல்: வேட்புமனு வாங்குவதற்கு 5 அலுவலர்கள் நியமனம்

புதுக்கோட்டை நகராட்சி  தேர்தல்: வேட்புமனு  வாங்குவதற்கு 5 அலுவலர்கள் நியமனம்
X

புதுக்கோட்டை நகராட்சியில் வேட்பாளர்களிடம் வேட்புமனு வாங்குவதற்கான அலுவலகங்களை தயார்படுத்தும் நகராட்சி அலுவலர்கள்

நகராட்சியில் 42 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் 5 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுவை வாங்குவதற்கு 5 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி ,பேரூராட்சி தேர்தல்கள் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பல்வேறு இடர்பாடுகளால் நடைபெறாமல் இருந்து வந்தது. மேலும் நகராட்சி தேர்தல்கள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் பல்வேறு கட்சிகள் சார்பில் நீதிமன்றத்தில் உடனடியாக நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில் எப்பொழுது தேர்தல் நடைபெறும் என பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது..

மேலும் தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது தேர்தல் நடைபெறுமா ? என அரசியல் கட்சிகள் பெரும் எதிர்பார்த்து வந்த நிலையில் நேற்று தமிழக தேர்தல் அதிகாரி தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் தேதியை அறிவித்து அதற்கான அட்டவணையை வெளியிட்டனர்.

அதன்படி நாளை முதல் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவித்திருந்தது. அதன்படி இன்று புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை நகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் 5 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வேட்பும னுக்களை வாங்குவதற்கு 5 அலுவலர்களை நியமித்து ஒவ்வொரு அறையிலும் 5 முதல் 6 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் வாங்குவதற்கு தற்போது நகராட்சி அலுவலகத்தில் அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.வேட்புமனு வாங்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது .அதேபோல் நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை வாங்குவதற்கு ஐந்து அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்து வருகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது