புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர்பற்றாக்குறை: தாமாக

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர்பற்றாக்குறை:  தாமாக
X

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் தமிழரசன் கலந்து கொண்டு பேசினார்

தொடர்ந்து பெய்த மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு உள்ளது

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் தாமாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.எல். தமிழரசன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் லேனா சரவணன், ஆனந்த் மாணிக்கம், ராமன், ரங்கராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விமான விபத்தில் பலியான ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கூகுர் சண்முகம் உள்ளிட்ட மறைந்த நிர்வாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

இதையடுத்து நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதுக்கோட்டை தமிழ் மாநில .காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக ஆர்.எல். தமிழரசனை தேர்வு செய்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அதனை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து பெய்த கனமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவக் கூடிய சூழ்நிலையில், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் கழிவு நீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தொடர் மழையின் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் மழை நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கடுமையான உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு போதிய அளவில் உரம் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதேபோல் பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகளும் இருந்தும் போதிய செவிலியர்கள் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போதிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!