தீ விபத்து கோழிக்கடை முற்றிலும் எரிந்து நாசம்

புதுக்கோட்டையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, கோழிக்கடை முற்றிலும் எரிந்து நாசமானது.

புதுக்கோட்டை நகர் கீழ 4ம் வீதி ராஜகுலம் கரையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக கோழிக்கடை முற்றிலுமாக எரிந்து நாசமாகின மேலும் காற்றின் வேகத்தால் அருகில் இருந்த டீ கடை எதிர்புறம் உள்ள வீட்டின் மேல்பகுதியில் தீ பிடித்து விட்டின் ஒரு பகுதி மட்டுமே எரிந்தன

பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக புதுக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

மளமளவென பிடித்து எரிந்த தீயினால் கோழி கடை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்புத் துறையினர் வேகமாக தீயை அணைத்ததால் அடுத்தடுத்த வீடுகளில் தீ பற்றி எரியாமல் விபத்து தடுக்கப்பட்டது

அதேபோல் கடைகளும் திறக்கப்படாமல் இருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது மேலும் தீ எவ்வாறு பற்றியது என்பது குறித்து கணேஷ் நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

Tags

Next Story