புதுக்கோட்டை மாவட்டத்தின் நடப்பு நிதியாண்டுக்கான கடன் இலக்கு நிர்ணயம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்து இந்த ஆண்டு கடன் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ 5610.83 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு திட்ட அறிக்கை வெளியீட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்து இந்த ஆண்டு கடன் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கையை வெளியிட அதை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் காரைக்குடி மண்டல முதன்மை மேலாளர் லட்சயா பெற்றுக்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2021-22 ஆம் கடன் திட்ட அறிக்கையை மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்குவதற்கு ஏதுவாக கடன் திட்ட அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்திற்கு ரூ 4424.15 கோடியும் தொழில்துறைக்கு ரூ 262.61 கோடியும் கல்விக் கடன் வீட்டுக் கடன் மற்றும் இதர துறைகளுக்கு என மொத்தம் ரூ 924.07 போடியம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
திட்ட அறிக்கை வெளியீட்டு விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட தொழில் துறை மேலாளர் மாவட்ட தாட்கோ மேலாளர் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் மாவட்ட மேலாளர் நபார்டு வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu