புதுக்கோட்டை திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்: சட்ட அமைச்சர் ரகுபதி வழங்கல்

புதுக்கோட்டை திமுக சார்பில்  நலத்திட்ட  உதவிகள்: சட்ட அமைச்சர் ரகுபதி வழங்கல்
X

புதுக்கோட்டை வடக்கு 4ம் விதியில் 10வது வட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை நகராட்சி 10 -ஆவது வட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

புதுக்கோட்டை நகராட்சி 10 -ஆவது வட்ட திமுக சார்பில் வடக்கு 4 -ஆம் வீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு, பொது மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், திமுக நகர செயலாளர் க.நைனா முகமது நிர்வாகிகள் சுப சரவணன், அரு வீரமணி, மற்றும் காங்கிரஸ் கட்சி வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன்,திமுக வட்ட கழக செயலாளர்கள் ராமச்சந்திரன், காசி இளங்கோ, குமார், பிரதிநிதி பாண்டியன், மற்றும் சீனிவாசன், ராஜசேகர் , நிர்வாகிகள் முருகன், சேகர் ,ரவி உள்பட கலந்து கொண்டனர்.

முன்னதாக, கணேசன், சரவணனின் தந்தை குணசேகரனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய உருவப் படத்தை அமைச்சர் எஸ். ரகுபதி திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!