புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு

புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு
X

புதுக்கோட்டை, புது குளத்தில் கரைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்.

புதுக்கோட்டையில், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், புது குளத்திற்கு கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவதற்கு, தமிழக அரசு தடை விதித்தது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில், 5க்கும் மேற்பட்ட இடங்களில், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் வீட்டு வாசல் முன்பாக, விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, இன்று மாலை அனைத்து சிலைகளும், புது குளத்திற்கு கொண்டு வரப்பட்டு வரிசையாக நிறுத்தி, குளத்தில் கரைக்கப்பட்டன.

அப்போது, இந்து முன்னணி அமைப்பினர் ஜெய்காளி ஓம்காளி என்று கோஷமிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இதேபோன்று மாவட்டம் முழுவதும், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பின்னர் கரைக்கப்பட்டன.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்