குடிநீர் கேட்டு புதுக்கோட்டை போஸ் நகரில் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு புதுக்கோட்டை போஸ் நகரில் பொதுமக்கள் சாலை மறியல்
X

புதுக்கோட்டை போஸ்ட் நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை போஸ் நகரில், குடிநீர் முறையாக வழங்கக்கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும், நகராட்சி சார்பில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், தினந்தோறும் நகராட்சிப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது.

அவ்வகையில் இன்று, புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட போஸ் நகர் பகுதியில், குடிநீருக்காக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பல மாதங்களாக காவிரி குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நிலைமை சரி செய்யவில்லை என்றும் பொதுமக்கல் தெரிவித்தனர்.

பொதுமக்களின் சாலை மறியலால், அங்கு விரைந்த கணேஷ் நகர் காவல் துறையினர், மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில், சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!