வருங்கால சந்ததியருக்காக புராதன சின்னங்களை பராமரிக்க வேண்டும்: நீதிபதி பேச்சு
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் வேதியியல் துறை முன்னாள் மாணவர் மாணவிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வருகை தந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் வரவேற்ற கல்லூரியின் முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான எஸ் ஆர் ராமச்சந்திரன்
புராதன சின்னங்களை பராமரிக்காமல் விட்டு விட்டால் வருங்கால சந்ததியருக்கு தெரியாமல் போய்விடும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரா. சுரேஷ்குமார்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு கூட்டம் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு மன்னர் கல்லூரி வேதியியல் துறை தலைவர் பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் திருச் செல்வன் தலைமை உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வேதியியல் துறை முன்னாள் இன்னாள் மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் முன்னாள் வேதியியல் துறை மாணவரும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான இரா. சுரேஷ்குமார் பேசியதாவது:
புதுக்கோட்டை மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி படித்த மாணவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல அதையும் தாண்டி உலகம் முழுவதும் புதுக்கோட்டை மன்னர் கல்லூரினுடைய மாணவர்கள் பல்வேறு தலங்களில் சிறப்பு பெற்று பெருமை பெற்றிருக்கிறார்கள் என்றால் அது இந்த மன்னர்கல்லூரிக்கு பெருமை. புதுக்கோட்டை மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த பொழுது ஒரு 250 ஆண்டுகள் மன்னர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட விஷயங்கள் நிறைய உண்டு ஆனால் இன்று இருக்கும் தலைமுறைக்கு அவற்றில் பல விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கிறது.
ஒன்று இரண்டு விஷயங்களைத் தவிர, இதற்கு காரணம் வரலாற்றை நாம் அழித்து விட்டோம அல்லது நாம் வரலாற்றை மறந்து விட்டோம். புதுக்கோட்டையில் மன்னருடைய அரண்மனையாக இருந்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்படுகிறது. அதேபோல் பொது அலுவலகம் என்று இருந்தது தற்போது நீதிமன்ற வளாகமாக மாறியுள்ளது அதேபோல் ஆட்சியரின் முகாம் இல்லம் மற்றும் மன்னர் கல்லூரி உள்ளது.மன்னர் காலத்தில் காற்றோட்டமான பகுதிகளில் இந்த கல்லூரி அமைக்க வேண்டும் என நினைத்து அதற்காக புதுக்கோட்டை மன்னர்கள் இடம் ஒதுக்கி இப்படிப்பட்ட கல்லூரியை கட்டியுள்ளனர்.
இப்படிப்பட்ட வரலாற்று பொக்கிஷங்களை நாம் தற்போது மறந்து விட்டோம் என்றால் வரலாற்று சின்னங்கள் தானாகவே அழிந்து போய்விடும். அதனை சரிவர பராமரிக்காமல் இருந்து விட்டாலும் வரலாறு மறந்து போகும். வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்க முடியாது வருங்கால சந்ததிகளுக்கு இதுபோன்ற வரலாறுகள் தெரியாமல் போய்விடும் ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் தில்லியில் செங்கோட்டை ஒன்று இருக்கிறது என்றால்தான் முகலாயர் உடைய வரலாறு தெரிகிறது.
ஆக்ராவில் அக்பருடைய கோட்டைக்குச் என்றால் அக்பருடைய வரலாறு அங்கே சொல்லப்படுகிறது. வரலாறு படித்திருக்கலாம் ஆனால் அது போன்ற வரலாற்று சின்னங்களை பார்த்தால்தான் அந்த வரலாற்றில் முழுமையாக ஈடுபட முடியும். தமிழ்நாட்டில் எந்தப் பக்கம் எடுத்துக் கொண்டாலும் இறை சம்மந்தமான நிறைய ஆலயங்களை நம்முடைய முன்னோர்களும் மன்னர்களும் உருவாக்கி தந்துள்ளனர்.
ஆயிரத்து 10 ஆண்டுகள் கடந்து தஞ்சை கோபுரம் உலகளாவிய மிகப்பெரிய வரலாற்று சின்னமாக இருக்கிறது. அந்த வரலாற்று சின்னத்தை தவிர வேறு அடையாளங்கள் நமக்கு இல்லை இப்போது நாம் வைத்திருக்கக் கூடிய அடையாளங்களைத் தாண்டி மண்ணில் புதைந்துள்ள அடையாளங்களை தோண்டி எடுத்து, தமிழன் பார்த்துக் கொண்டிருக்கிறான் 5 ஆயிரம் ஆண்டுகள் 6000 ஆண்டுகள் ஆகலாம் அல்லது அதையும் தாண்டி தமிழனுடைய நாகரீகம் செம்மை படுத்தி கிடந்த தா என பூமிக்கு அடியில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவே தற்போது தமிழகத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கலாச்சாரம் பெருமை மிக்க ஒரு தமிழ் சமூகம் இந்த பூமிப்பந்தில் இருந்திருக்கிறது. அது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதா இல்லை அதையும் தாண்டி வரலாற்றோடு இருந்து இருக்கிறதா என்பது குறித்து உலகளாவிய அளவில் இருக்கக்கூடிய ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்துடன் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வரலாற்று சின்னங்களில் என்னென்ன வரலாற்றுச்சின்னங்கள் தற்போது மிஞ்சி இருக்கிறதோ எஞ்சி இருக்கிறதோ அதையாவது நாம் பேணி பாதுகாக்க வேண்டும். இந்த பாரம்பரியம் மிக்க சின்னங்களை எதற்காக பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் வருங்கால சந்ததிகளுக்கு இது போன்ற பாரம்பரியமிக்க புராதான சின்னங்கள் இருக்கிறது என்பதை காட்டுவதற்கு நாம் புராதான சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.
புதுக்கோட்டை பழமைமிக்க மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு அரசாங்கம் மட்டும் ஒத்துழைத்தால் போதாது, இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களும் அதற்கான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu