26-ல் காவலர் உடற்தகுதித் தேர்வு; தேர்வர்கள் தீவிர பயிற்சி
காவலர் உடற்தகுதி தேர்வுக்காக நீளம் தாண்டும் பயிற்சியை மேற்கொள்ளும் தேர்வர்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்துறை எழுத்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உடற்தகுதித் தேர்வுக்காக பல்வேறு பயிற்சிகளை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் கெரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக தமிழகத்தில் காவலர் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது வைரஸ் தொற்று சற்று குறைந்து வந்த நிலையில் வரும் 26-ஆம் தேதி புதுக்கோட்டை காவலர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் உடற்தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தற்போது ஏறபணிகள் நடைபெற்று வருகிறது.
வருகின்ற 26 ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் காவலர் உடற்தகுதி தேர்வில் மொத்தம் 2613 பேர் கலந்து கொள்கின்றனர். அதில் ஆண்கள் 1722 பேரும், பெண்கள் 891 என மொத்தம் 2613 பேர் கலந்துகொள்கிறார்கள்.
இதற்கான பயிற்சிகளை தற்போது புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவலர் எழுத்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ,100 மீட்டர் ,400 மீட்டர், உள்ளிட்ட ஓட்ட பயிற்சிகள் என பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த உடற்தகுதி தேர்வில், இரண்டாம் காவல் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் காலி பணியிடங்கள் உள்ளிட்டவைகளுக்கு உடற்தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu