மருத்துவ பணியாளர்களுக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்

மருத்துவ பணியாளர்களுக்கு  உணவு வழங்கும் சமூக ஆர்வலர்
X
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சமூக ஆர்வலர் உணவு வழஙகி வருகிறார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் டீக்கடை நடத்தி வருபவர் குமார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உணவில்லாமல் மிகுந்த சிரமம் அடைந்து வரும் நிலையை பார்த்தார். இந்த பசியினை போக்க குமார் தன்னுடைய நண்பர்கள் மூலமாகவும்,

தமிழ்நாடு தேயிலை தோட்ட கலை கூட்டுத்தாபனம் உதவியுடன் மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், ஏழை மக்களுக்கும் இலவசமாக உணவுகளை வழங்கி வருகிறார் இன்று 300 நபர்களுக்கு உணவு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை டவுன் காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் கலந்து கொண்டு உணவு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார் .

Tags

Next Story