நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகை கையாடல், 3 பேரிடம் போலீஸ் விசாரணை

நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகை கையாடல், 3 பேரிடம் போலீஸ் விசாரணை
X
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கோடி மதிப்பிலான நகைகளை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

அண்ணா சிலை அருகே உள்ள தனியார் நிதி நிறுவனமானது கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு நகை கடன் தனிநபர் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் கொடுக்கப்பட்டு இயங்கி வந்தது.

கடந்த இரண்டு நாட்களாக கடன்கள் பற்றிய கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது அப்போது நகை கடன் பிரிவில் கையாடல் செய்தது தெரிய வந்தது,

இதில் நிறுவனத்தில் ஓராண்டாக 306 சவரன் நகை கையாடல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மண்டல மேலாளர் ராஜேஷ் அளித்த புகாரில் அங்கு பணியாற்றிய சோலைமணி, உமாசங்கர், முத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்,

மேலும் கையாடல் செய்த மூன்று பேரை கணேஷ் நகர் காவல் துறையினர் பிடித்து தற்போது தீவிர விசாரணை செய்து வருகின்றனர் தனியார் நிறுவனத்தில் நகைகள் கையாடல் செய்திரப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்