மழை நீரை வெளியேற்றும் பணியினை நேரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்
புதுக்கோட்டை 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் மழை நீரை வெளியேற்றும் பணியினை நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த அதிகாரிகள்.
மழை நீரை வெளியேற்றும் பணியினை அதிகாரிகள் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது அடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. புதுக்கோட்டையில் காலையில் இருந்து லேசான மழை பெய்து வந்தது.
புதுக்கோட்டை அருகே 9A நத்தம் மண்ணை ஊராட்சியில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணி ஜேசிபி இயந்திரம் முலம் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை இன்று நேரடியாக ஊராட்சி மன்றத் தலைவர் ஏவிஎம் பாபு மற்றும் அரசு அதிகாரிகள் குமாரவேல், சங்கர், சிவப்பிரகாசம், சுசீந்திரன், மற்றும் புதுக்கோட்டை ஒன்றிய சேர்மன் சின்னையா ஆகியோர் நேரடியாக சென்று ஒவ்வொரு பகுதியாக மழை நீரை வெளியேற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் அருகிலுள்ள குளம் நிரம்பி மழை நீர் செல்லும் வரத்து வாரியில் முறையாக மழை நீர் வெளியேற்றப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்து பொதுமக்கள் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றப்படும் என பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தும் சென்றனர். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியை அரசு அதிகாரிகள் மழையையும் பொருட்படுத்தாமல் நேரடியாக சென்று ஆய்வு செய்தது அப்பகுதி பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu