தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வில் அரையப்பட்டி அரசுப்பள்ளி மாணவியர் முத்திரை!
தேசிய திறனறித்தேர்வில் முத்திரை பதித்த, அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 5 பேர், சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு, எட்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு, அடுத்து வரும் 9,10,11,12 வகுப்புகள் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1000 ருபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டு நடத்தப்பட்ட திறனறித் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டம், அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு அரசுப் பள்ளி வளாகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வடிவேல், பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியன், ஊராட்சி மன்றத் தலைவர் மலர்விழி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிங்காரம், தமுஎகச மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் ஆசிரியர்கள் குணசேகரன், ஜீவானந்தம், மணிகண்டன், ரெங்கநாதன், பாலு, பாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu