/* */

அரசு ஊழியர் வீட்டில் பல கோடி சொத்து ஆவணங்கள்: லஞ்ச ஒழிப்பு துறை தகவல்

சோதனையில் சொத்து ஆவணங்கள் பல்வேறு விதமான சந்தை முதலீடுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

அரசு ஊழியர் வீட்டில் பல கோடி சொத்து ஆவணங்கள்: லஞ்ச ஒழிப்பு துறை தகவல்
X

புதுக்கோட்டையில் அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்ட சோதனை.

புதுக்கோட்டையிலுள் அரசு ஊழியர்கள் வீட்டில் நேற்று காலை தொடங்கி அதிரடி சோதனை 16 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவில் முடிவடைந்தது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முருகானந்தம் வீட்டில் இருந்து 83 பவுன் தங்க நகைகள். 3 கிலோ 700 கிராம் வெள்ளிபாத்திரங்கள் 46 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

புதுக்கோட்டையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி அரசு ஊழியர் முருகானந்தம் மற்றும் அவரது மனைவி ஊராட்சி மன்றத் தலைவர் காந்திமதி வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்று வந்த சோதனை 16 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு முடிவடைந்தது. புதுக்கோட்டையில் மூன்று இடத்திலும் வெட்டன்விடுதி கிராமத்தில் மூன்று இடத்திலும் மொத்தம் ஆறு இடங்களில் சோதனையானது நடைபெற்றது.

இதில் வெட்டன்விடுதி கிராமத்தில் நடைபெற்று வந்த சோதனை நேற்று மாலை முடிவடைந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை 15 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் அவரது வீட்டில் நடந்து வந்த சோதனை முடிவடைந்தது.

முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தி சோதனையில் 83 பவுன் தங்க நகைகள் 3 கிலோ 700 கிராம் வெள்ளி பாத்திரங்கள் 46 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், பல்வேறு விதமான சந்தை முதலீடுகள் உள்ள ஆவணங்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி மேல் நடவடிக்கை தொடங்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 30 Sep 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...