நடமாடும் வாகனம் மூலம் ஆவின் பால் வீடுகளில் வழங்கும் திட்டம் முதலமைச்சருக்கு கோரிக்கை

நடமாடும் வாகனம் மூலம் ஆவின் பால் வீடுகளில்  வழங்கும் திட்டம் முதலமைச்சருக்கு கோரிக்கை
X
நடமாடும் ஆவின் பால் வாகனத் திட்டத்தை உடனடியாக தொடங்கவேண்டுமென தமிழக முதல்வருக்கு காந்திப் பேரவை நிறுவனர் ர் தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு

பால் வாங்க மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க ஆவின் மூலமாக வீடுகளுக்கு பால் கிடைக்கும் விதமாக நடமாடும் ஆவின் பால் வாகனத்தையும், பால் தேவைப்படுவோர்கள் இலவசமாக அழைக்கும் விதமாக அதற்கான பொது அழைப்பு எண்ணையும் அறிமுகப் படுத்த தமிழக அரசு உடனடியாக முன்வரவேண்டும்.

இதனால் பொதுமக்களை வெளியில் வராமல் இருக்கச்செய்வதோடு,ஆவின் விற்பனையையும் அதிகப்படுத்தலாம் இதன் மூலம் மக்களையும் அரசு நிறுவனமான ஆவின் நிறுவன வாடிக்கையாளர்களாக்கலாம் இதனால் ஆவின் நிறுவனம் லாபம் ஈட்ட வழிவகைசெய்யலாம்/

இப்படி பல வகையில் பயனளிக்க கூடிய நடமாடும் ஆவின் பால் திட்டத்தை தமிழக முதல்வர் உடனடியாக தொடங்க காந்திப் பேரவை சார்பாக வேண்டுகிறோம் என காந்திப் பேரவையின் நிறுவனர் முனைவர் தினகரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு