புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ நேரில் ஆய்வு

புதுக்கோட்டை நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ முத்துராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதை எம்எல்ஏ முத்துராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை நகர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதையடுத்து புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா நகர செயலாளர் நைனா முகமது கட்சி நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோருடன் சென்று மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளான கே.எல்.கே.எஸ். நகர் எக்ஸ்டென்ஷன் குறிஞ்சிநகர் சேங்காய் தோப்பு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வரத்து வாரிகளை உடனடியாக தூர்வாரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் நகராஜ், நகராட்சி ஆய்வாளர்கள் மற்றும் திமுக வட்டச் செயலாளர் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!