சொந்த செலவில் 12 செவிலியர்களை நியமனம் செய்த எம்எல்ஏ

சொந்த செலவில் 12 செவிலியர்களை நியமனம்  செய்த எம்எல்ஏ
X
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது சொந்த செலவில் 12 செவிலியர்களை நியமனம் செய்த எம்எல்ஏ

புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு சார்பில் புதிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா இன்று தனது சொந்த செலவில் 12 செவிலியர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நியமனம் செய்தார்.

அவர்களுக்கு தானே சம்பளம் வழங்க உள்ளதாகவும் கூறிய எம்எல்ஏ முத்துராஜா மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி முன்னிலையில் தான் நியமித்த செவிலியர்களுக்கு பணி ஆணையை வழங்கிய எம்எல்ஏ முத்துராஜா செவிலியர்கள் எவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த இக்கட்டான காலத்தில் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!