தமிழக முதலமைச்சர் வேண்டுகோளின்படி குளக்கரையில் மரக்கன்று நடவு செய்த அமைச்சர்கள்
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பொன்னப்பன் ஊரணி குளக்கரைகளில் மரக்கன்று நட்டு வைத்த அமைச்சர் ரகுபதி, மெய்யநாதன்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட திருவப்பூர் 24 வது வட்ட திமுக சார்பில் பொன்னப்பன் ஊருணியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரித்து வருவதற்கு நகராட்சி நிர்வாகம் நடைபாதை அமைத்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தப் பகுதியை பசுமை பரப்பாக மாற்றும் வகையில் குளக்கரையை சுற்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்த, நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், நகரக் கழக செயலாளர் நைனா முகமது, நெசவாளர் அணி அமைப்பாளர் எம் எம் பாலு, திமுக நிர்வாகிகள் நிஜாம் முகமது, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu