புதுக்கோட்டையில் ஒரு அமைச்சர் தாமதம்; மற்றொரு அமைச்சர் கோபம். விழாவை புறக்கணித்தார்

புதுக்கோட்டையில் ஒரு அமைச்சர் தாமதம்; மற்றொரு அமைச்சர் கோபம். விழாவை புறக்கணித்தார்
X

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தற்காலிக செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். 

தற்காலிக செவிலியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் தாமதமாக வந்ததால் அமைச்சர் ரகுபதி விழாவை புறக்கணிப்பு.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக செவிலியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பணி நியமன ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிகழ்ச்சி நடத்துவதற்கான நேரத்தில் வராமல் தாமதமாக வந்ததால், சுற்றுச்சூழல் அமைச்சரை வைத்து தற்காலிக செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி கொள்ளுங்கள் என கூறி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிகழ்ச்சியினை பாதியிலே புறக்கணித்து விட்டுச் சென்றார்.

பின்னர் தாமதமாக வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தற்காலிக செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தாமதமாக வந்ததை அடுத்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றது கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!